×

தரமான தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படுகிறதா?நஞ்சநாடு, இத்தார் கூட்டுறவு தொழிற்சாலைகளில் அமைச்சர் ஆய்வு

ஊட்டி : ஊட்டி  அருகே நஞ்சநாடு மற்றும் இத்தலார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தரமான  தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படுகிறதா? என வனத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு  மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள்  (இன்ட்கோ) உள்ளன. இத்தொழிற்சாலைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் அங்கத்தினர்களாக இருந்து தங்களது தோட்டத்தில் பறிக்கும்  பசுந்தேயிலையை அந்தந்த கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு விநியோகம் செய்து  வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு மற்றும் இத்தலார்  பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலை  கொள்முதல் செய்யப்படுகிறதா? என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் திடீர் ஆய்வு  மேற்கொண்டார். தொடர்ந்து தொழிற்சாலை செயல்படும் விதம் குறித்து  கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் கூறுகையில்,“பசுந்தேயிலைக்கு  குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக  இருந்து வருகிறது. விவசாயிகள் தரமான பசுந்தேயிலை வழங்குவது அவசியம்.  விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தரமான பசுந்தேயிலையை கொள்முதல் செய்து  தரமான தேயிலை தூள் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.  இந்த ஆய்வின் மாவட்ட கலெக்டர் அம்ரித், போது சிறப்பு பகுதி மேம்பாட்டு  திட்ட இயக்குநர் மற்றும் இன்ட்கோ சர்வ் முதன்மை செயல் அலுவலர் ேமானிகா  ரானா, ஊட்டி தாசில்தார் ராஜசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்….

The post தரமான தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படுகிறதா?நஞ்சநாடு, இத்தார் கூட்டுறவு தொழிற்சாலைகளில் அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nanjanadu ,Ittar ,Ooty ,Ittalar ,Ittar co-operative factories ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...